1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (17:52 IST)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்.. தமிழ்நாடு அணி வெற்றி.. நடராஜன் 4 விக்கெட்டுகள்..!

Natarajan
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி பரோடா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்  தமிழக வீரர் நடராஜன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்,.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து 163 ரன்கள் இலக்கு என்று பரோடா அணி விளையாடிய நிலையில் அந்த அணி 23.2 ஓவர்களில் 10 விக்கெட் களையும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 51 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அதேபோல் பந்துவீச்சில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மூன்று கட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva