திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (08:04 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணியை வீழ்த்திய திண்டுக்கல்.. ஷிவன் சிங் அபார பேட்டிங்..!

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் அணி வீழ்த்தியுள்ளது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாடிய நிலையில் 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
திண்டுக்கல் அணியின் சிவம் சிங் அபாரமாக விளையாடி 74 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியை அடுத்து திண்டுக்கல் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடத்தில் கோவை மற்றும் நெல்லை அணிகள் உள்ளன
 
Edited by Siva