கேரளா, பஞ்சாபை ஒதுக்கிய உலகக்கோப்பை கிரிக்கெட்: தலைவர்கள் கண்டனம்..!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை நேற்று வெளியான நிலையில் இந்த அட்டவணையை பார்த்த ஒரு சிலர் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முதல் போட்டி, இறுதிப்போட்டி மற்றும் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஆகிய மூன்றுமே குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு பஞ்சாப் மாநில அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு போட்டி கூட நடைபெறாத நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள மைதானத்திற்கு 3 போட்டிகளா என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானம் என பலரும் புகழ்ந்த திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திற்கு உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டி கூட வழங்கப்படாதது ஏமாற்றம் அடைகிறது என காங்கிரஸ் எம்பி சசிகரூர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஓரிரு போட்டிக்காவது ஒதுக்கி இருக்கலாம் என்றும் இந்தியாவில் கிரிக்கெட் தலைநகரமாக அகமதாபாத் மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகளில் நடைபெற இருக்கும் நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு போட்டி கூட இல்லை என்பது கேரளா கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran