1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (11:36 IST)

உலகக்கோபை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்: பிரபலம் கணிப்பு..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியான நிலையில் இந்த போட்டி குறித்து சில கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பகிர்ந்து உள்ளார். 
 
இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இந்தியா பாகிஸ்தான்  இறுதி போட்டியில் தகுதி பெற்றால் அந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்த மைதானத்தில் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில் ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Mahendran