செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (21:22 IST)

டெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

புரோ கபடி போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


புள்ளிப்பட்டியலில் மொத்தமுள்ள 12 இடங்களில் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தோல்விகள் தொடர்ந்தால் கடைசி இடத்திற்கும் செல்லவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெல்லி அணி இன்றைய போட்டியில் 50 புள்ளிகள் எடுத்தனர். அந்த அணியின் ராகுல் செளத்ரி 13 ரைட் புள்ளிகளும் 4 போனஸ் புள்ளிகளும் என 17 புள்ளிகள் தனது அணிக்கு எடுத்து கொடுத்தார். அதேபோல் மீரஜ் 12 புள்ளிகளும் விஜய் 5 புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் செளத்ரி 14 புள்ளிகளும், அஜித்குமார் 9 புள்ளிகளும் பெற்றனர். 

 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் டெல்லி, பெங்களூரு, ஹரியானா, பெங்கால், ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் டெல்லி, பெங்களூரு, ஹரியானா ஆகிய அணிகள் தலா 59, 48, 46 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகின்றன.