புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (23:15 IST)

டிராவில் முடிந்த மும்பை-புனே விறுவிறுப்பான போட்டி

புரோ கபடி போட்டி கடந்த ஏழு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் புனே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. புனே அணி 10வது இடத்தில் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு படி முன்னேறலாம் என்ற நோக்கில் தீவிரமாக விளையாடியது. அதேபோல் மும்பை இன்னும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது
 
 
இதனையடுத்து இரு அணிகளும் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் கவனத்துடன் விளையாடினர். கடைசி வரை இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவில் இருந்தது. கடைசியில் இரு அணிகளும் தலா 33 புள்ளிகள் பெற்றதை அடுத்து இன்றைய போட்டி டிராவில் முடிந்தது. மும்பை அணியின் அபிஷேக் சிங் ரைடில் 9 புள்ளிகளையும் புனே அணியில் மஞ்சித் ரைடில் 5 புள்ளிகளையும் தங்களது அணிக்கு பெற்றுத்தந்தனர்.
 
 
 
இன்றைய போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி, பெங்களூரு, ஹரியானா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. அதேபோல் பெங்கால், ஜெய்ப்பூர் மற்றும் மும்பை அணிகள் அடுத்த ஆறு இடங்களில் உள்ளது. தமிழ் தலைவாஸ் மேலும் ஒரு இடம் பின்னோக்கி 11வது இடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகமாக மங்கிவிட்டது