1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (16:31 IST)

ஹோட்டலில் விற்கப்படும் ”ஆர்ட்டிகிள் 370”: ஒரு விநோத தகவல்

டெல்லியில் ஒரு ஹோட்டலில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து வந்த ”ஆர்ட்டிகிள் 370” விற்கப்படுகிறது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான ஆர்ட்டிகிள் 370 சட்டம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபலமான ஹோட்டல், “ஆர்ட்டிகிள் 370 தாளி” என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த உணவு சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. சைவ உணவின் விலை ரூ.2,370, அசைவ உணவின் விலை ரூ.2,669. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ.370 குறைக்கப்படுகிறது. அரசு அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே போதுமானது.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் சுல்வெட் கல்ரா கூறுகையில், நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம், ஆதலால் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதால் ”ஆர்ட்டிகிள் 370 தாளி”யை அறிமுகபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ”மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம் என என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.