1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:03 IST)

ரூ.23,000 ஃபைன் கட்டிட்டு போ... டிராபிக் போலீஸ் கறார் வசூல்!

டெல்லியில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறிய இருச்சக்கர வாகன ஓட்டுநருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஜூலை மாதம் மோட்டார் வாகன் சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மேலும், மோட்டார் வாகனச்சட்டம் செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது போல கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், டெல்லியில் குர்கானைச் சேர்ந்த ஒருவர் எந்த ஒரு ஆவணங்களும் இன்றி, ஹெல்மெட் அணியாமலும் வண்டி ஓட்டி சென்றுள்ளான். அந்த நபரை பிடித்த போலீஸார் ரூ.23,000 அபராதம் வித்துள்ளனது. 
 
அதோடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வாகனபதிவு சான்று இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் போடப்பட்டதாம்.