செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (08:10 IST)

அதிவேகமாக 100 ரன்கள்: விராட் கோலி - சூர்யகுமார் ஜோடி சாதனை!

virat surya
அதிவேகமாக 100 ரன்கள்: விராட் கோலி - சூர்யகுமார் ஜோடி சாதனை!
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அதிரடியாக 100 ரன் சேர்த்து சாதனை செய்துள்ளனர்
 
நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் இருவரும் சேர்ந்து அதிவேகமாக 100 ரன்கள் சேர்த்து சாதனை செய்துள்ளனர் 
 
இதற்கு முன்னர் கே எல் ராகுல் மற்றும் தோனி கூட்டணியின் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர். இதனை அடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva