செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (14:23 IST)

என்ன மருந்தாவது குடுங்க.. நான் க்ரவுண்டுக்கு போகணும்! – அடம்பிடித்த சூர்யகுமார் யாதவ்!

Suryakumar Yadav
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவுடன் மோதியது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பகா விளையாடிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசி 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

போட்டிக்கு பிறகு அக்சர் படேல் சூர்யகுமாரிடம் கேள்விகள் கேட்டார். அப்போது பிசியோ அறையில் உங்களை பற்றி என்ன பேசுகிறார்கள்? ஏன் அதிகாலை 3 மணிக்கே எழுந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் “போட்டிக்கு முன்தினம் இரவு எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் இருந்தது. அதனால் போட்டிக்கு முன்பாக நான் டாக்டரிடம் சென்று எனக்கு என்ன செய்வீர்களோ, என்ன மருந்து கொடுப்பீர்களோ தெரியாது. நான் மைதானத்திற்கு சென்று விளையாட வேண்டும் என கேட்டேன்.

அவர்கள் எனக்கு மருந்து கொடுத்தனர். அதன்பின்னர் களத்தில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தவுடன் அது வேறு ஒரு உணர்வாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.