திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (22:37 IST)

விராத், சூர்யகுமார் யாதவ் அரை சதங்கள்; தொடரை வென்றது இந்தியா!

india
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தன
 
இதனையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர் என்பதும், இந்த வெற்றி காரணமாக இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது