ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!
ரஞ்சித் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டியில், விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வலிமையான மும்பை அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து, முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 270 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 406 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை உருவாகியது. ஆனால், மும்பை அணி 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து, விதர்பா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இறுதி போட்டிக்கு கேரளா அணி தகுதி பெற்றுள்ளதால் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, கேரளா மற்றும் விதர்பா அணிகள் இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது.
Edited by Mahendran