1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav icc latest ranking

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முன்னேற்றம்… பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார்!

இந்தியா
இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சூர்யகுமார் சிறப்பாக செயல்பட்டார். இதன்  மூலம் பேட்ஸ்மேன்களுக்கான டி 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் விராட் கோலிக்குப் பிறகு நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வீரராக சூர்யகுமார் யாதவ் உருவாகியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவரை முந்தி பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் முதலிடத்துக்கு சென்றார். இந்நிலையில் இப்போது ஆஸி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் நான்காம் இடத்தில் இருந்து பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வீரர்களை இப்படியா நடத்துவது?... முதல்வர் தலையிட வேண்டும்… ஷிகார் தவான் கோரிக்கை!