வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:53 IST)

தவான் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்…!

ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தவானின் சாதனையை முறியடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சூர்யகுமார் சிறப்பாக செயல்பட்டார். இதன்  மூலம் பேட்ஸ்மேன்களுக்கான டி 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் விராட் கோலிக்குப் பிறகு நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வீரராக சூர்யகுமார் யாதவ் உருவாகியுள்ளார்.

தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் அவர் டி 20 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் அவர் 700 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஷிகார் தவான் 686 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை இப்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.