ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் அதிரடி நீக்கம்
நேற்று முடிவடைந்த ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை தடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தில்லுமுல்லு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பான்கிராப்ட் என்ற பவுலர் பந்தை சேதப்படுத்திய காட்சி கேமிராவில் சிக்கி கொண்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து நடந்த விசாரணையில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியை ஒப்புக்கொண்டார். எனவே ஆஸ்திரேலிய கேப்டன் என்ற முறையில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டார்
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித்துக்கு பதிலாக அந்த அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.