கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து

shami
Last Modified ஞாயிறு, 25 மார்ச் 2018 (11:36 IST)
டெல்லியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்துக்காகியதில் ஷமிக்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்தார். ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் இருக்க கூடும் என புகார் அளித்திருந்தார். இதனால் பிசிசிஐ அவரின் பெயரை ஒப்பந்த பட்டியலில் சேர்க்கவில்லை
 
ஷமி சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.  இதனால் பிசிசிஐ  இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் அவரை பி கிரேடில் சேர்த்துள்ளது.  
 
இந்நிலையில் டேராடூனில் இருந்து டெல்லி சென்ற ஷமியின் கார் விபத்துக்குள்ளாகி ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஷமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :