திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (11:33 IST)

உண்மையை போட்டு உடைத்த கிரிக்கெட் வாரியம்: அதிர்ச்சியில் முகமதி ஷமி

இந்திய கிரிக்கெட் வாரியம் முகமதி ஷமி கடந்த மாதம் துபாயில் தங்கியிருந்தது உண்மை தான் என  கொல்கத்தா போலீசுக்கு தெரிவித்துள்ளது.

 
 
முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.
 
மேலும், முகமது ஷமி தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பவில்லை, அவர்  துபாய்க்கு சென்று தனது காதலி அலிஷ்பாவை பார்க்க சென்றிருந்தார்.  அப்போது அலிஷ்பாவுக்கு இங்கிலாந்து தொழிலதிபர் ஒருவர் பணம் கொடுத்து ஷமிக்கு கொடுக்க சொன்னதாக ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் கொல்கத்தா போலீசுக்கு ஷமி பற்றி அளித்த விவரத்தில், அவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் முடிந்ததும் கடந்த மாதம் 17, 18-ம் தேதி துபாயில் தங்கியிருந்தது உண்மை தான் என தெரிவித்துள்ளது.