வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (14:34 IST)

இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா?- மனம் திறந்த ராஷி கண்ணா

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷி கண்ணா.
 
நடிகை ராஷி கண்ணா, அதர்வாவுக்கு ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும், சித்தார்த்துக்கு ஜோடியாக ‘சைத்தான் கி பச்சா’ படத்திலும் நடிக்கிறார். மேலும், விஷாலுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகின.
 
நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் இந்தியாவில் அதிகமாக நடந்து உள்ளன. கீதா பஸ்ரா ஹர்பஜன் சிங்கையும், ஹஜீல் யுவராஜ் சிங்க்கையும், அனுஷ்கா சர்மா விராட் கோலியையும் திருமணம் செய்து உள்ளனர்.
 
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, நடிகை ராஷி கண்ணா காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டது.
 
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, பும்ராவும் நானும் காதலிப்பதாக இணையதளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளார்.