நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 7 போட்டிகள் நடைபெற உள்ளன.
2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 தொடங்கி மே 25 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கான மெகா ஏலமும் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணையும் வெளியாகியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் 7 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.
CSK அணியின் ஹோம் க்ரவுண்ட் மேட்ச் தேதிகள், அணிகள்..:
மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ்
மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஏப்ரல் 5 - டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஏப்ரல் 25 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ்
மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ்
சென்னையில் நடைபெற உள்ள 7 போட்டிகளையும் கண்டுகளிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.
Edit by Prasanth.K