1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (09:03 IST)

FIFA உலகக் கோப்பை 2022 – துவக்க தேதி அறிவிப்பு!!

FIFA உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 முதல் கத்தாரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கத்தாரில் நவம்பர் 20 முதல் ஃபிஃபா உலகக் கோப்பையை தொடங்க ஃபிஃபா கவுன்சில் ஒருமனதாக முடிவு எடுத்தது. 2022 ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடக்க போட்டி மற்றும் விழாவை அல் பேட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஃபிஃபா ரசிகர்கள் காண முடியும்.

இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல உலக கோப்பையை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் நவம்பர் 20 ஆம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

32 அணிகளின் 8 பிரிவு விவரம்:
1. ஏ பிரிவு - கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து
2. பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
3. சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து
4. டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
5. இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா,ஜெர்மனி, ஜப்பான்
6. எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
7. ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
8. எச் பிரிவு -  போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா