வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:27 IST)

விஜய்யின் மேலும் ஒரு நாட்டில் தடையா? வெளியான பரபரப்பு தகவல்!

விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு ஏற்கனவே குவைத் நாடு தடை விதித்துள்ள நிலையில் தற்போது கத்தாரிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையடுத்து அதற்கான பணிகள் நடந்துவரும் நிலையில் தற்போது அந்த திரைப்படம் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இஸ்லாமியர்களோடு தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த படத்துக்கு ஏற்கனவே குவைத் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் கத்தாரிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.