ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (11:44 IST)

இந்திய பொருட்களை புறக்கணித்தால்.. பதிலுக்கு நாங்களும்! – ட்ரெண்டாகும் #BoycottQatarAirways!

Qatar
முகமது நபிகள் சர்ச்சையை தொடர்ந்து இந்திய பொருட்களை புறக்கணிப்போம் என அரபு மக்கள் ட்ரெண்ட் செய்த நிலையில் பதிலுக்கு இந்திய நெட்டிசன்களும் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் பாஜக ஆட்சி மத்தியில் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் பாஜக பிரமுகர் இஸ்லாமிய இறை தூதரான நபிகள் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இதற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து பாஜக பிரமுகரை இடைநீக்கம் செய்த பாஜக தலைமை விளக்க கடிதமும் வெளியிட்டது. ஆனாலும் இந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அரபு மக்கள் பலர் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அதையடுத்து இந்தியாவிலிருந்து பலரும் பிரபல அமீரக விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேய்ஸை புறக்கணிப்பதாக #BoycottQatarAirways என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.