புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (22:09 IST)

புரோ கபடி 2018: அணிகளின் தற்போதைய புள்ளிகள் நிலவரம்

புரோ கபடி 2018 போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் மொத்தம் 51 போட்டிகள் முடிந்துவிட்டன. இந்த போட்டி தொடரில் இரு பிரிவுகளிலும் உள்ள அணிகளின் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

ஏ பிரிவில் புனே அணி 37 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியை அடுத்து மும்பை 34 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 29 புள்ளிகளுடன் குஜராத் அணி 3வது இடத்திலும் உள்ளது. 17, 16, 7 ஆகிய புள்ளிகளுடன் டெல்லி, ஹரியானா, மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் உள்ளன,

'பி' பிரிவில் பெங்களூர் அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், உபி அணி 25 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், பாட்னா அணி 23 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. இதேபோல் 22.21, 17 புள்ளிகள் பெற்று பெங்கால், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் உள்ளன. 17 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்தாலும் இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் தமிழ் தலைவாஸ் அணி முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது