புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (22:23 IST)

தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி

இந்த ஆண்டின் புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.

முதல் பாதியில் 17-15 என்று முன்னணியில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் பல தவறுகளுடன் மோசமாக விளையாடியதால் மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் அணி 36-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் இரண்டு இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் இனிவரும் போட்டிகளிலாவது கவனம் செலுத்தி வெற்றி பெற்றால்தாஅன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்