புரோ கபடி இன்றைய போட்டிகள்: பெங்களூரு, புனே அணிகள் வெற்றி

Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (22:25 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன

முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியுடன்
மோதியது. கடைசி வரை ஆக்ரோஷாமாக இரு அணி வீரர்களும் விளையாடிய நிலையில் இறுதியில் புனே அணி 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி அடைந்தது.


இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியுடன் மோதியது. கடைசி வரை இரண்டு அணிகளும் வெற்றி பெற சமவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் இறுதி நிமிடங்களில் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை பாட்னா அணி பெங்கால் அணியுடன் மோதவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :