திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (07:56 IST)

33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்!

33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்!
கராச்சியில் நேற்று தொடங்கிய பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் அந்த அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இம்ரான் பட் மற்றும் அபிட் அலி ஆகிய இருவரும் 9 மற்றும் 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்
 
இதனை அடுத்து வந்த கேப்டன் பாபர் அஷாம் 5 ரன்களும், ஷாஹின் ஷா அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதுவரை அவுட் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களும் சேர்த்து மொத்தமே 20 ரன்கள் தான் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது அசார் அலி மற்றும் ஃபாவத் அலாம் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பதும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தென்னாப்பிரிக்க தரப்பில் ரபடா 2 விக்கெட்டுகளையும் நார்ட்ஜி மற்றும் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்னும் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 187 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது