1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (16:59 IST)

கராச்சி டெஸ்ட்: 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா!

கராச்சி டெஸ்ட்: 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா!
பாகிஸ்தான் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்ஆப்பிரிக்கா அணி கராச்சியில் இன்று முதல் டெஸ்டை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததையும் அடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சால் 220 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடதக்கது
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டீன் எல்கர் 58 ரன்களும் ஜார்ன் லிண்டே 35 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா 3 விக்கெட்டுகளையும் நாமுன் அலி மற்றும் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹசன் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் 
 
இந்த நிலையில் சற்று முன் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது என்பதும், அந்த அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது