வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (07:57 IST)

369 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்: நடராஜன் 3 விக்கெட்டுக்கள்!

369 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்: நடராஜன் 3 விக்கெட்டுக்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் சற்று முன் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
லாபிசாஞ்சே 108 ரன்களும், பைன் 50 ரன்களும் வேட் 47 ரன்களும் 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்களில் மிக அபாரமாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் 
 
அதேபோல் சார்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 369 ரன்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் இழந்ததை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்