ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை! ரசிகர்கள் ஏமாற்றம்!
ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டது. அதையடுத்து 2021 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்த முறை அணிகளாக இருக்கும் பஞ்சாப், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போட்டிகள் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடக்க உள்ளது.
மேலும் லீக் போட்டிகள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடக்கும் குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டியில் வேண்டுமானால் அனுமதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அதிகரித்துள்ள கொரோனா பரவலே இந்த முடிவுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.