வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (07:24 IST)

சுவிஸ் ஓப்பன் டென்னிஸ்: கோப்பையை நழுவவிட்ட இந்தியாவின் பிவி சிந்து!

கோப்பையை நழுவவிட்ட இந்தியாவின் பிவி சிந்து!
கடந்த சில நாட்களாக சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்தியாவின் பிவி சிந்து படிப்படியாக வெற்றி பெற்று காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு முன்னேறினார்
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோப்பையை நூலிழையில் நழுவ விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். நேற்று இந்தியாவின் பிவி சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா என்ற வீராங்கனையுடன் மோதினார். இந்த இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 21-12, 21-5 என்ற நேர்செட்டில் சிந்துவை கரோலினா வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இதனை அடுத்து சிந்துவின் கோப்பை கனவு நழுவியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கரோலினா, பிவி சிந்துவை எட்டு முறை வென்று உள்ள நிலையில் நேற்று பெற்ற வெற்றியால் 9வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இறுதி போட்டி வரை சிறப்பாக விளையாடிய பிவி சிந்துவுக்கு இந்தியர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது