புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 மார்ச் 2021 (15:56 IST)

மீண்டும் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கிய அக்ஸர்!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் இரண்டாவது இன்னிங்ஸீல் 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா 365 ரன்கள் சேர்த்து 160 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதையடுத்து இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தி வருகிறது. இளம் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அக்ஸர் படேல் இதுவரை விளையாடியுள்ள 3 டெஸ்ட் போட்டுகளில் 4 முறை 5 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.