டீகாக் அபார ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் சூப்பர் வெற்றி!
டீகாக் அபார ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் சூப்பர் வெற்றி!
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 24வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் மும்பை அணி 172 என்ற இலக்கை நோக்கி விளையாடியது
அந்த அணியின் குவின்டன் டிகாக் அபாரமாக விளையாடி 70 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதேபோல் க்ருணாள் பாண்டியா 39 ரன்கள் அடித்தார் என்பதும் இதனை அடுத்து மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய வெற்றி மூலம் மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது