வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:29 IST)

கொரோனா நிவாரண நிதியாக 7.5 கோடி… ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரில் இருந்து, வீரர்கள் வரை அனைவரும் சேர்ந்து 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளனர்.