வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:29 IST)

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் தொடரின் 24வது போட்டியான இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில் சற்று முன் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது 
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை, ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மும்பை அணி வெற்றி பெற்றால் ஏற்கனவே இருக்கும் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் நான்காவது இடத்தை ராஜஸ்தான் பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
ராஜஸ்தான் அணி: பட்லர், யாஷஷ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்
 
மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்,  ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நாதன் கெளட்லர், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்