வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:48 IST)

கொரோனாவுக்கு ரூ.7.5 கோடி நிதியுதவி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் சார்பில் 7.5 கோடி ரூபாய் கொரோனா நிதி அளிக்கப்பட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது
 
இன்றைய போட்டி தொடங்கும் முன்னர் ராஜஸ்தான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக கொரோனா பரவி வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே பேட் கம்மின்ஸ், பிரட்லீ உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி செய்ததை அடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரூபாய் 7.5 கோடி நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.