விசா பிரச்சனை முடிந்தது…. விரைவில் அணியுடன் இணையும் மொயின் அலி!
சி எஸ் கே அணி வீரர் மொயின் அலி இந்தியா வருவதற்கான விசா பெறுவதில் சிக்கல் எழுந்த நிலையில் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது அவர் விசாவைப் பெற்றுவிட்டதாகவும், விரைவில் அவர் இந்தியா வந்து அணியுடன் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.