ஒரு சகாப்தத்தின் முடிவு.. கண்ணீருடன் ட்ரெண்ட் செய்யும் தோனி ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதை ரசிகர்கள் சோகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஜடேஜா அணி கேப்டன் பதவியை வகிப்பார் என்றும் தோனி விளையாட்டு வீரராக மட்டும் பங்கேற்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தாங்கள் ரசித்து வந்த அணி கேப்டன் தோனியின் விலகலை "END OF AN ERA", #MSDhoni உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.