உலகக் கோப்பையை வென்றால் தான் திருமணம்... இளம் வீரர் உறுதி !
ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் தனது திறமையான பந்து வீச்சு மூலம் எதிரணி வீரர்களைத் திணறடித்து வருகிறார். இவர் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்றால்தான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வங்காளதேச அணிக்கு எதிராக டெஸ்ட்டில் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
இந்நிலையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொடன் ரஷிதி ஆப்கான் அணி உலகக் கோப்பை வென்றால் தான் திருமணம் செய்து கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷித் கானை புதிய சல்மான் கான் என்றும் உலகக்கோப்பையை ஆப்கான் அணி வெல்ல 2015 வரை காத்திருக்க வேண்டும் என கூறி அந்நாட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.