திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (18:24 IST)

கங்குலியின் கடைசி டெஸ்ட் - தாதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி !

கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியில் அவரிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்த தோனியின் செயல் தனக்கு ஷாக்காக இருந்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தலைமை தாங்கிய கேப்டன்களில் வெற்றிகரமானவர்களில் கங்குலியும் ஒருவர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரோடு தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அவரை வழியனுப்பி வைத்தது. நாக்பூர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் கேப்டன் தோனி கங்குலியையே கேப்டன்சி செய்ய சொன்னார்.

இதுபற்றி தற்போது கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் உடனான யுடியூப் உரையாடலில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் கங்குலி. அதில் ‘அந்த போட்டியின் இறுதி நாள், நான் படிக்கட்டுகளில் இறங்கிய போது, வீரர்கள் எனக்கு மரியாதை செலுத்தும் விதமாக அணிவகுத்து நின்றனர். அப்போது தோனி என்னிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்தார். அதை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றோம். ஆனால் என் கவனம் முழுவதும் ஓய்வைப் பற்றியே இருந்தது. கடைசி சில ஓவர்கள் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.