விராத் கோஹ்லியின் பெங்களூரை வீழ்த்திய தினேஷின் கொல்கத்தா
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியின் இடையில் சில நிமிடங்கள் மழை பெய்தபோதிலும், கொல்கத்தாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த இலக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி லின், உத்தப்பா ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 62 ரன்கள் எடுத்த லின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் அடித்திருந்தது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.