திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (18:09 IST)

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்; ராஜஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்கு

முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
 
வழக்கம்போல் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்துமா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.