1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (19:11 IST)

போராடும் ராஹானே; ஆட்டத்தை ஆரம்பித்த ஹைதராபாத்

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க போராடி வருகிறது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே அணியை வெற்றி பெற வைக்க கடுமையாக போராடி வருகிறார். சாம்சன் 40 ரன்களில் ஆட்டமிழக்க அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
 
30 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.