திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (22:26 IST)

பெங்களூர்-கொல்கத்தா போட்டியில் திடீரென குறுக்கிட்ட மழை

இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றனர். இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமானது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்பதால் இரு அணிகளும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றன. 
 
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் அடித்துள்ளனர். கேப்டன் விராத்கோஹ்லி 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
 
176 என்ற இலக்கை நோக்கி விளையாடி வந்த கொல்கத்தா அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் புதிய இலக்கு கொல்கத்தா அணிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.