கோலியின் உடல்நிலை குறித்து முக்கியத்தகவலை வெளியிட்ட புஜாரா!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முதுகுவலியால் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் கோலி இல்லாததது தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்ட புஜாரா கோலியின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில் என்னால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் கோலி குணமாகிவருகிறார். அவர் சீக்கிரம் அணிக்கு திரும்பி விடுவார் எனக் கூறியுள்ளார். கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.