செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (10:06 IST)

கோலி ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை… டிராவிட் சொன்ன பதில்!

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இப்போது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

ஒருநாள் போட்டிகளின் கேப்டன்ஷிப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டதும், அது சம்மந்தமாக பிசிசிஐ மற்றும் விராட் கோலி அளித்த விளக்கங்களால் ஏற்பட்ட குழப்பமும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிககாவில் டெஸ்ட் அணியை வழிநடத்தும் விராட் கோலி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. இதற்கும் பிசிசிஐதான் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிராவிட்டிடம் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிராவிட் ‘கோலி ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை என்றால் அவரின் 100 ஆவது டெஸ்ட் விரைவில் வர இருக்கிறது. அப்போது அவர் ஊடகங்களை சந்தித்தால் அது மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும். அப்போது நீங்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்கலாம். இதைத்தவிர வேறு எந்த விஷயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.