திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (11:24 IST)

குண்டுகாயம் பட்ட சிறுவன் - உடல்நலத்தை விசாரித்த அமைச்சர்!

குண்டுகாயம் பட்ட சிறுவன் புகழேந்தியின் உடல் நலம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை என்ற பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது என்பது தெரிந்ததே. இந்நிலையில் அந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இதனிடையே தலையில் துப்பாக்கி குண்டால் காயம்ப்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தியின் உடல் நலம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சிறுவன் நலமுடன் இருக்கிறான். தேவையென்றால் தனியார் மருத்துவமனை உயர்தர சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக அந்த பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது என பேட்டியளித்தார்.