வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (17:36 IST)

சாம்பியன் பட்டத்தோடு மும்பை அணியில் இணைந்தார் பொல்லார்ட்!

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக துபாய் வந்து சேர்ந்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கைரன் பொல்லார்ட்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக திகழும் மும்பை இதுவரை நான்கு முறைக் கோப்பையை வென்றுள்ளது. இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கைரன் பொல்லார்ட் கரிபியன் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக துபாய் வராமல் இருந்தார். இந்நிலையில் தான் கேப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த மகிழ்ச்சியோடு அவர் இப்போது துபாய் வந்து சேர்ந்துள்ளார். அவர் மட்டும் இல்லாமல் பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் இன்று துபாய் வந்து சேர்ந்துள்ளனர்.

இன்னும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மட்டும் துபாய் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.