திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (17:14 IST)

குயின் இணையத்தொடரை ஒளிபரப்பத் தடை இல்லை… நீதிமன்றம் அதிரடி முடிவு!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தொடரான குயினை ஒளிபரப்பத் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இரண்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். எனினும் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. மேலும் தலைவி திரைப்படத்தை கற்பனையானது என அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் குயின் இணையத்தள தொடரை தடை செய்ய வேண்டும் என மீண்டும் புதிய மனு தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம் குயின் தொடரையும் , தலைவி படத்துக்கும் எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளது. இது சம்மந்தமான மேல் முறையீட்டு மனுவை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.