திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (14:31 IST)

கணவரை விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்சா?

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.  

இதையடுத்து இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் இப்போது சானியா மிர்சா சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு அவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப் போகிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அவர் வைத்துள்ள பதிவில் “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பது கடினம். ஃபிட்டாக இருப்பது கடினம். அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். கடனில் இருப்பது கடினம். பொருளாதார தன்னிறைவோடு இருப்பது கடினம். அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். தொடர்புகொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பதும் கடினமானது. அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை எப்போதுமே எளிதாக இருப்பதில்லை.  எப்போதுமே கடினமானதாகதான் இருக்கும். ஆனால் நாம் நம் கடினத்தை தேர்வு செய்யலாம்.  அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள்” எனக் கூறியுள்ளார்.