வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (07:21 IST)

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே இன்று 3வது டி20 ஆட்டம்: முழுமையான வெற்றி கிடைக்குமா?

afganisthan -india
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று பெங்களூரில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  
 
ஜனவரி 11ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் ஜனவரி 14-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. 
 
இதனை அடுத்து இன்று பெங்களூரில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டால் முழுமையான வெற்றி கிடைக்கும் என்பதும் ஆப்கானிஸ்தான் வாஷ்அவுட் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 
இன்றைய போட்டியில் பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றும் ஆனால் ஆப்கானிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 இந்த தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva